வெள்ளக்காடாக காட்சியளிக்கும் இமாச்சல பிரதேசம்! எந்த நேரமும் உதவுவேன் என தெரிவித்த மாநில முதல்வர்! - Seithipunal
Seithipunal


இமாச்சல பிரதேசத்தில் தொடர் மழை காரணமாக பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்:

இமாச்சல பிரதேசத்தில் பருவமழை கொட்டி தீர்த்ததன் காரணமாக எங்கு பார்த்தாலும் வெள்ளாகாடாக காட்சி அளிக்கிறது. சாலைகளில் வாகனகள் செல்ல முடியாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கிருந்த பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. 

சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

இமாச்சல பிரதேசத்தில் இரண்டு நாள் பெய்த மழையில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் கனமழை அச்சுறுத்தல் காரணமாக, மாநிலமே வெள்ளத்தால் தத்தளித்து வரும் நிலையில், மக்கள் அனைவரையும் வீட்டிற்குள்ளேயே இருக்க அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் ''இமாச்சல பிரதேசத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். 

மாநிலம் முழுவதும் நாங்கள் 1100, 1070, 1077 ஆகிய 3 உதவி எண்களை அறிவித்துள்ளோம். மழை வெள்ளத்தால் சூழ்ந்த பகுதியில் சிக்கியிருக்கும் மக்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக இந்த உதவிக்கு எண்களை அணுகலாம். எந்த நேரமும் உங்களுக்கான உதவிகளை செய்ய தயாராக இருப்பேன்'' என, தெரிவித்துள்ளார். 

மேலும் எம்.எல்.ஏ.-க்களும் தங்களுக்கு  உட்பட்ட தொகுதியில் முகாம் அமைத்து மக்களுக்கு உதவி செய்வதாக கேட்டுக்கொண்டுள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

heavy rain amid himachal chief minister say help all time


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->