ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்து....பயணிகளின் நிலை? - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இருந்து குளோபல் வெக்ட்ரா என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது.  தொடர்ந்து  புனேவின் பாட் கிராமம் அருகே சென்றபோது பலத்த காற்று மற்றும் மோசமான வானிலையின் காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. 


ஹெலிகாப்டரில் கேப்டன் உட்பட மொத்தம் நான்கு பேர் பயணித்த நிலையில், அதிர்ஷ்டவசமாக நான்கு பேரும் உயிர் தப்பினர். மேலும் இந்த விபத்தில் கேப்டன் ஆனந்த் படுகாயம் அடைந்த நிலையில், அவர் சதார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் மற்ற மூன்று பேரின் உடல் நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று மேற்கு மகாராஷ்டிராவின் புனே மற்றும் சதாரா மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என்பது  குறிப்பிடத்தக்கது.

மேலும் கிழக்கு மத்திய அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் மகாராஷ்டிராவின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Helicopter crash accident passenger condition


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->