மோசடி வழக்கு: ஹேமந்த் சோரனிடம் தொடங்கிய விசாரணை... ஏராளமான போலீசார் குவிப்பு! - Seithipunal
Seithipunal


நில மோசடி தொடர்பான வழக்கில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் பலமுறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில் கடந்த வாரம் அவரது வீட்டிலேயே விசாரணை நடத்தினர். 

இதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஹேமந்த் சோரனிடம் இன்று பிற்பகல் 1:30 மணி அளவில் அமலாக்கதுறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். 

இதற்கிடையே டெல்லியில் ஹேமந்த் சோரனின் வீட்டில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 36 லட்சம் ரொக்கம், சொகுசு கார், ஆவணங்கள் போன்றவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 

இந்நிலையில் இன்று நடத்தப்படும் விசாரணையின் முடிவில் ஹேமந்த் சோரன் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனைத் தொடர்ந்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவதால் மாநிலம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை, அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு 100 மீட்டர் தொலைவு துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hemant Soren ED Investigation 


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->