உயிரை விட்டும், 4 பேருக்கு வாழ்வு கொடுத்த சிறுமி.! தந்தை உருக்கம்.!  - Seithipunal
Seithipunal


இமாச்சலப் பிரதேசத்தில் 11 வயது நைனா தாக்கூர் என்ற சிறுமி கடந்த மார்ச் 3-ல் சாலைவிபத்தில் அடிபட்டு பலத்த காயமடைந்து மருத்துவமனையில் 4 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். 

அந்த சிறுமி மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், சிறுமியின் பெற்றோர் கதறி அழுதனர். அதன் பின்னர் மருத்துவர்கள் உங்கள் குழந்தையுடைய கருவிழிகள் மற்றும் சிறுநீரகங்கள் மற்ற நோயாளிகளுக்கு பொருத்தமாக இருக்கிறது. 

நீங்கள் உடலுறுப்பு தானம் செய்ய விரும்பினால் நான்கு பேருடைய வாழ்வை மீட்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர்கள் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புதல் அளித்தனர். 

சிறுமியின் இரு சிறுநீரகங்களும் 2 சிறுநீரக நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் பொருத்தப்பட்டது. அதுபோல, சிறுமியின் இரண்டு கருவிகளும் கண்பார்வையற்ற இரண்டு பேருக்கு மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் பொருத்தப்பட்டது.

இதன்மூலம் நான்கு பேருக்கு சிறுமி மறுவாழ்வு கொடுத்துள்ளார். சிறுமியின் பெற்றோரை போல பலரும் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வர வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை வைத்தனர். 

இதுகுறித்து சிறுமியின் தந்தை, "உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவிப்பது மிக கடினமான முடிவு. ஆனால், எனது மகள் இதை விரும்புவாள் என்ற எண்ணம் தான் இந்த முடிவை எடுக்க வைத்தது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

himachal girl recover 4 live


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->