ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்திற்கு பதில் வீர சாவர்க்கர் படம் - மத்திய அரசுக்கு இந்து மகாசபா வலியுறுத்தல்.!!
hindhu magasaba tell to central govt replace savarkar photo on currency notes
கடந்த 1966 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரரும், இந்து மகாசபா முன்னாள் தலைவருமான வீர சாவர்க்கர் உயிரிழந்தார். அதனால், ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி அவருடைய நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், நேற்று நாடு முழுவதும் வீர சாவர்க்கரின் நினைவு தினம் கொண்டாடப்பட்டது. அதன் படி, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் இந்து மகாசபா அலுவலகத்தில் நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், அலுவலக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர். அப்போது, இந்து மகாசபா சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டது. அந்தக் கடிதத்தில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:-
"நாட்டில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்திக்கு பதிலாக வீர சாவர்க்கர் மற்றும் இதர சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவங்களைப் பொறிக்க வேண்டும். மேலும், பாராளுமன்ற கட்டிடத்திற்குச் செல்லும் சாலைக்கு வீர சாவர்க்கர் பெயரை சூட்ட வேண்டும்" என்று வலியுறுத்தி எழுதியுள்ளனர்.
English Summary
hindhu magasaba tell to central govt replace savarkar photo on currency notes