ஞானசேகரன் திமுகவின் ஆதரவாளர் என்பதை மறுக்கவில்லை - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!
AU Case TN Assembly CM Stalin Speech DMK
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகர் திமுக நிர்வாகி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் ஞானசேகரன் பின்னணியில் இருக்கும் யார் அந்த சார்? என்ற கேள்வியையும் எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த தீர்மானத்தின் போது தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர். பின்னர் தீர்மானத்தின் மீது பதில் வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "குற்றவாளி யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவி புகார் அளிக்கப்பட்ட உடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
60 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதை உறுதி செய்வதுடன், உரிய தண்டனையை பெற்று தருவோம். கைது செய்யப்பட்டு இருக்கக்கூடிய ஞானசேகரன் திமுக உறுப்பினர் இல்லை என்பதை உறுதியாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவர் திமுகவின் ஆதரவாளர் என்பதை மறுக்கவில்லை.
அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்து இருக்கலாம், அது தவறில்லை. குற்றவாளி திமுகவை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்திருப்போம். தமிழக அரசே பொறுத்தவரை பெண்களின் பாதுகாப்பு தான் முக்கியம். பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என்பதை உறுதிப்பட மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் இந்த விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவரும் அதிமுக உறுப்பினர்களுக்கு, பொள்ளாச்சி விவகாரத்தை சுட்டிக்காட்டி முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதனால் அதிமுக உறுப்பினர்கள் கடும் அமலில் ஈடுபட்டனர். மேலும் முதல்வர் ஸ்டாலினுக்கு சட்டப்பேரவையிலேயே கண்டன கோஷம் முழக்கமிட்டனர்.
English Summary
AU Case TN Assembly CM Stalin Speech DMK