செல்போனை பழுது நீக்க கொடுக்கப் போகிறீர்களா.? பெண்களே உஷார்.! - Seithipunal
Seithipunal


பெண்கள் தங்களுடைய செல்போனை பழுது நீக்க தரும் பொழுது அதை சம்பந்தப்பட்ட சர்வீஸ் டீலர்ஸ் மற்றும் அல்லது தெரிந்த நபர்களிடம் கொடுத்து சர்வீஸ் செய்யுமாறு கேட்டுக்கொள்வதாக  புதுச்சேரி இணைய வழி காவல் முதுநிலை கண்காணிப்பாளர் திரு நாரா சைதன்யா ஐபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 

கடந்த சனிக்கிழமை அன்று மிகப்பெரிய தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் இரு பெண்கள் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். வந்த இடத்தில் ஒருவருடைய ஆப்பிள் போன் பழுதாகி விட்டது உடனடியாக பழுது நீக்க ரெயின்போ நகரில் இருக்கின்ற ஒரு பழுது நீக்கும் மையத்திஇல்  போனை கொடுத்திருக்கிறார். அந்தக் கடை உரிமையாளர் அரை மணி நேரம் கழித்து வந்து பெற்றுக் கொள்ளுங்கள் சரி செய்து விட்டு சொல்கிறேன் என்று அவர்களை அனுப்பிவிட்டு சிறிது நேரம் கழித்து உங்கள் கைபேசி சரியாகிவிட்டது நான் சரியாக இருக்கின்றதா என்று சோதனை செய்து சொல்கிறேன் உங்களுடைய ஸ்கிரீன் பாஸ்வேர்டை சொல்லுங்கள் என்று கேட்கவே மேற்படி பெண்ணும் பாஸ்வேர்டை கொடுத்துள்ளார். 

அரை மணி நேரம் கழித்து சரி செய்ததற்கான பணத்தை கொடுத்துவிட்டு செல்போனை வாங்கி சென்று பார்த்த பொழுது மேற்படி அந்த ஆப்பிள் போனில்,last activities கடைசியாக என்னென்ன செய்தார்கள் என்று பார்ப்பதற்கான ஆப்ஷன் உள்ளது.மேற்படி பழுது நீக்கும் நபர் போட்டோ  கேலரி உள்ளால் சென்று 15 நிமிடத்திற்கு மேல் பயன்படுத்தியது தெரிய வரவே அந்த பெண் இணைய வழி காவல் நிலையத்தில் வந்து புகார் கொடுத்தார். மேலும் மேற்கண்ட வடநாட்டு இளம் பெண்ணும் அவருடைய காதலரும் நிறைய தனிப்பட்ட புகைப்படங்களை அந்த ஃபோனில் எடுத்து வைத்திருப்பதாக காவல் நிலையத்தில் கூறினார்.

 .உடனடியாக மேற்படி நபரை அழைத்து வந்து அவருடைய செல்போனை சோதனை செய்த போது 250 க்கும் மேற்பட்ட அந்தப் பெண் மற்றும் அந்த பெண்ணின் காதலனுடன் இருக்கின்ற தனிப்பட்ட புகைப்படங்களை அவருடைய செல்போனுக்கு மாற்றி இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவருடைய செல்போனில் இருந்த அனைத்து புகைப்படங்களையும் அழித்துவிட்டு கடைக்குச் சென்று அங்கு ஏதாவது கம்ப்யூட்டரில் அந்த புகைப்படங்களை சேமித்து வைத்துள்ளார் என்பதையும் சோதனை செய்து எந்த புகைப்படங்களும் சேமித்து வைக்கவில்லை என்பதாலும், மேற்படி வடநாட்டு இளம்பெண் புகார் கொடுக்காததால் செல்போன் ரிப்பேர் செய்த அந்த நபரை இணையவழி போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

இது சம்பந்தமாக இணைய வழி காவல் முதுநிலை கண்காணிப்பாளர் திரு நாரா சைதன்யா ஐபிஎஸ் அவர்கள் சொல்வது என்னவென்றால் பெண்கள் தங்களுடைய செல்போனை பழுது நீக்க தரும் பொழுது அதை சம்பந்தப்பட்ட சர்வீஸ் டீலர்ஸ் மற்றும் அல்லது தெரிந்த நபர்களிடம் கொடுத்து சர்வீஸ் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் மேலும் இதுபோன்று தங்களுடைய புகைப்படங்களை மற்றவர்கள் திருடும் வாய்ப்பு இருப்பதால் இது போன்ற புகைப்படங்களை செல்போனில் சேமித்து வைக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். இது போன்ற தனிப்பட்ட புகைப்படங்களை சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் உபயோகப்படுத்தினால் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Are you going to get your phone repaired Ladies beware


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->