ஆந்திரா: படித்தது 4ம் வகுப்பு.. 5 மொழிகள் அத்துப்படி..10 வருடங்களில் 70க்கும் மேற்பட்ட கொள்ளை.. 'ஸ்பைடர் திருடன்' சிக்கியது எப்படி..?! - Seithipunal
Seithipunal



ஆந்திராவைச் சேர்ந்தவர் சதிஷ் ரெட்டி (36).  இவர் யூ டியூப் மூலம் பெரிய பெரிய வில்லா மற்றும் வணிக வளாகங்களில் கொள்ளையடிப்பது எப்படி? என்று கற்றுக் கொண்டு அதன் மூலம் குறுக்கு வழியில் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ நினைத்துள்ளார்.

பெரும் பணக்காரர்களை மட்டுமே குறி வைத்து திருடும் இவர் எத்தனை பெரிய சுவர் என்றாலும் சிலந்தி போல் அந்த சுவரில் ஏறி விடுவாராம். அதனாலேயே இவரை 'ஸ்பைடர் திருடன்' என்று அழைக்கின்றனர். இவர் திருடிய பணத்தைக் கொண்டு ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் 4 சொகுசு பங்களாக்கள் வாங்கியுள்ளார்.

மேலும் இவருக்கு தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகள் தெரியும். தனது 27 வயதில் திருட ஆரம்பித்தவர் தற்போது வரை 70க்கும் மேற்பட்ட கொள்ளைககளில் ஈடுபட்டுள்ளார். இவர் இறுதியாக கேரளாவில் ஒரு வீட்டில் திருடச் சென்றுள்ளார். 

அந்த வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் கேரள போலீசார் தேடுதல் வேட்டையை ஆரம்பித்து சுமார் 17 நாட்களுக்குப் பிறகு சதிஷ் ரெட்டியை ஆந்திராவில் கைது செய்துள்ளனர். இதற்கு சிசிடிவி காட்சிகள் பெருமளவில் உதவியதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.  மேலும் ஆந்திர போலீசாரின் உதவியாலும் இந்த 'ஸ்பைடர் திருடன்' கைது செய்யப் பட்டுள்ளார். 


கடந்த ஏப்ரல் மாதம் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் சுமார் 1 -1/2 கிலோ தங்கத்தை திருடிய வழக்கில் கைது செய்யப் பட்ட சதிஷ் ரெட்டி பின்னர் சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How Spider Thief Got Caught


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->