மட்டன் குழம்பு சமைக்காத மனைவியை அடித்தே கொன்ற கணவன்..!
Husband beats wife to death for not cooking mutton gravy
இரவு சாப்பாட்டுக்கு மட்டன் குழம்பு செய்யாத ஆத்திரத்தில் மனைவியை கணவன் அடித்தே படுகொலை செய்த சம்பவம் தெலுங்கானாவில் இடம்பெற்றுள்ளது.
தெலுங்கானாவின் மகபூபாபாத் நகரில் வசித்து வந்தவர் 35 வயதான மலோத் கலாவதி. நேற்றிரவு மட்டன் குழம்பு சமைக்கவில்லை என கூறி அவருடைய கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, வீட்டில் வேறு யாரும் இல்லாத நிலையில், வாக்குவாதம் முற்றியதில் மனைவியை அடித்து, தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த கலாவதி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் சஉடனடியாக சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் கொலை சம்பவம் தொடர்பான தடையங்களை சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், மட்டன் குழம்பு வைக்காத ஒரு சிறிய விசயம் குடும்ப வன்முறையாக உருவெடுத்துள்ளதாகவும், கொலை செய்யும் அளவிற்கு, இதுபோன்ற சம்பவம் வழிவகுத்து விட்டது என அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அத்துடன் இதனை நம்பவே முடியவில்லை என்றும், இவ்வாறு சின்ன விஷயங்கள் கூட குடும்ப வன்முறை அதிகரிக்க வைத்துள்ளது என கூறியுள்ளனர். மேலும், இதற்கு சட்ட ரீதியிலான கடுமையான நடவடிக்கை தேவையாக உள்ளது எனவும் கூறியுள்ளனர்.
English Summary
Husband beats wife to death for not cooking mutton gravy