கொலைகார கொடூர கணவன்!!!மனைவி உடலை சூட்கேஸ்ஸில் பதுக்கிய காரணம் என்ன?
husband kill and hiding his wifes body in suitcase
கர்நாடக பெங்களூரில் தொட்டகண்ணஹள்ளி பகுதியில் ராகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கௌரி அனில் சம்பேகர் என்பவர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள்.இதில் ராகேஷ் என்பவர் ஒரு ஐடி நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றயுள்ளார்.

தகராறு:
தற்போது வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்த நிலையில், தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் தகராறு ஏற்படும் போதெல்லாம் ராகேஷை அவரது மனைவி தாக்கியதாக தெரியப்படுகிறது. இந்நிலையில்,நேற்றுமுன்தினம் தம்பதிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டுதால் ஆத்திரம் அடைந்த ராகேஷ், மனைவியின் வயிற்றில் கத்தியால் குத்தி கழுத்தை அறுத்துள்ளார்.
அதன் பிறகு முழு உடலையும் மடித்து ஒரு டிராலி பையில் (சூட்கேஸ்) அடைத்து குளியலறையில் வைத்துவிட்டு மாமியார் வீட்டாருக்கு கைபேசியில் கால் செய்து உங்கள் மகளைக் கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.இதன்பின் புனேவுக்கு தப்பிச் செல்ல முடிவு செய்த ராகேஷ் உள்ளூர் காவல்நிலையத்திற்கு தற்கொலை என தகவல் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், குளியலறையிலிருந்த கௌரி அனிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு புனேவுக்கு தப்பி செல்ல முயன்ற ராகேஷையும் கைது செய்தனர்.
மேலும் இவ்வழக்கு தொடர்பாககாவலர்கள் கூறுகையில், 'உடல் துண்டுகளாக வெட்டப்படவில்லை. அது அப்படியே இருந்தது. இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது, மேலும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணையில் தெரியவரும்' எனத் தெரிவித்தனர்.
English Summary
husband kill and hiding his wifes body in suitcase