டீ கொடுக்க தாமதம் - ஆத்திரத்தில் மனைவியைக் கொன்ற கணவர்.! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள, காஜியாபாத் பகுதியைச் சேர்ந்தவர்கள் தரம்வீர்-சுந்தரி தேவி. இந்த தம்பதியருக்கு மூன்று மகன்கள் உள்னர். இந்த நிலையில், தரம்வீரர் சுந்தரியிடம் இன்று காலை ஆறு மணியளவில் தேநீர் கேட்டுள்ளார். 

அதற்கு சுந்தரி அடிக்கடி தேநீர் குடிப்பது உடல்நலத்திற்கு நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த தரம்வீர், வாளால் சுந்தரியைத் தாக்கியதால், சுந்தரியின் தலை துண்டித்து இறந்துவிட்டார்.

இதையடுத்து தரம்வீர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இதுகுறித்து அவரது மூத்த மகன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாகியுள்ள தரம்வீரை தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

husband kill wife in uttar pradesh


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->