கணவரின் நண்பர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை..மனைவி பரபரப்பு புகார்!
Husband s friends gang-raped Wife complains!
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கணவரின் நண்பர்கள் தன்னை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பிறப்புறுப்பில் பாட்டிலை திணித்ததாகவும் பரபரப்பு புகாரை காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன மாதம் அந்த பெண் விகாஸ் தியாகியுடன் லிவ்-இன் தொடர்பில் இருந்துள்ளார்.இவர்கள் வீடு காசியாபாத்தில் உள்ள கவி நகரில் உள்ளது. இதையடுத்து தன்னை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கற்பழித்ததாக விகாஸ் தியாகி மீது குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அந்த நேரத்தில் தான் கர்ப்பமாக இருந்ததாகவும், பாலியல் கொடுமை செய்ததுடன், வயிற்றில் எட்டி உதைத்ததால் கருவில் குழந்தை இறந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.மேலும் இது தொடர்பாக போலீசார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
தன்னுடைய புகாரில் நீதிபதி முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்த போது தன்னுடைய புகாரில் கூறியதில் இருந்து மாற்றி தெரிவித்துள்ளார். அப்போது எங்களுடைய உறவு சம்மதத்துடன்தான் நடைபெற்றது என்றும் தியாகி என்னை அடிக்க மட்டுமே செய்தார். ஆனால், நீதிமன்றத்திற்கு வெளியில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.மேலும் அத்துடன் மருத்துவர்கள் கூறிய அறிவுரைகளை கடைபிடிக்காததால் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் அதேமாதம் போலீசாரை அணுகி, தான் தியாகியை திருமணம் செய்து கொண்டதாகவும், முன்னதாக தான் அளித்த புகார அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இதே விசயத்தை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில்தான் கடந்த செவ்வாய்க்கிழமை போலீசார் அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தான் மார்க்கெட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, தியாகியின் நண்பர்கள் தன்னை கடத்தி சென்றதாகவும், தான் சுயநினைவு இழக்கும் வகையில் மர்ம் பொருள் அடங்கிய ஊசி செலுத்தியதாகவும், பின்னர் அவர்கள் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். சஅப்போது ம்பவம் நடைபெற்றதாக கூறிய இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளனர். மேலும் அவர் வீட்டில் இருந்து இரவு 8.30 மணிக்கு வெளியேறியதும், பின்னர் காரில் இருந்து இறங்கி வீட்டிற்கு 10.19 மணிக்கு வந்ததும் தெரியவந்துள்ளது. அவருடயை வீட்டிற்கு சாதாரணமாக செல்வதுபோல் சென்றது தெரியவந்தது.
பின்னர் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. பின்னர் ஏதோ திட்டத்துடன் தியாகி நண்பர்கள் மீது புகார் அளித்துள்ளார் என்பதை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டபோதுதான், புகார் பொய் எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது சிறையில் அடைத்துள்ளனர்.
English Summary
Husband s friends gang-raped Wife complains!