மனைவியின் தலையை 3 துண்டுகளாக வெட்டி கொன்ற கணவர் தூக்கிட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


மனைவியின் தலையை 3 துண்டுகளாக வெட்டி கொன்ற கணவர் தூக்கிட்டு தற்கொலை.!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி மாவட்டத்தில் வீரபாண்டியன் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாவிடு-நிர்மலாதம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த பாவிடு அடிக்கடி மது அருந்தி வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 

கணவரின் தொந்தரவைத் தாங்க முடியாமல் நிர்மலா போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி போலீசார் தம்பதியினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்துள்ளனர். அதன் பிறகும் பாவிடு மது அருந்திவிட்டு மனைவியிடம் மீண்டும் தகராறு செய்து வந்துள்ளார். இதையடுத்து நிர்மலா மீண்டும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து போலீசார் பாவிடுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த பாவிடு தன்னை சிறைக்கு அனுப்பிய மனைவி மீது இருந்த கோவத்தில் கத்தியை எடுத்து நிர்மலாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். 

அதன் பின்னர் நிர்மலாவின் தலையை மூன்று துண்டுகளாகவும்,  இரண்டு கைகளையும் துண்டு துண்டாக வெட்டி அறையின் இருபுறமும் தூக்கி எறிந்துள்ளார். இதைப்பார்த்த அவரது பிள்ளைகள் கதறி அழுதுள்ளனர். இதைக்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். 

அதன் படி போலீசார் விரைந்து வந்து நிர்மலாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை செய்து விட்டுத் தப்பி ஓடிய  பாவிடுவை போலீசார் தேடிய போது அவர் ஊருக்கு வெளியே இருந்த மரத்தில் தூக்கிட்டு உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband sucide after kill wife in andira


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->