கோவிட் அறிகுறி.. மூச்சுத்திணறலால் துடிதுடித்த வாலிபர்.. வலியால் அரங்கேறிய விபரீத முடிவு..!!
Hyderabad Hussain Sagar lake man commit suicide with covid 19 symptoms
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரை சார்ந்த 34 வயது இளைஞருக்கு இருமல் மற்றும் சளி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள தனியார் கிளினிக்கிற்கு கடந்த 2 ஆம் தேதி சென்று விசயத்தை கூறியுள்ளார்.
இதனைக்கேட்ட கிளினிக் மருத்துவர் அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைக்கு சென்று கொரோனா சோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
ஆனால் மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை என்ற காரணத்தால், அவருக்கு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், கடந்த 3 ஆம் தேதியன்று கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக அவதியுற்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அந்த இளைஞர் தனது நண்பருக்கு தொடர்பு கொண்டு அங்குள்ள ஹுசைன் சாகர் ஏரிக்கு அழைத்து செல்ல கூறியுள்ளார். நண்பரும், இளைஞரை ஏரிக்கு அழைத்து சென்ற நிலையில், திடீரென நீரில் விழுந்து தற்கொலை செய்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினர் இளைஞரின் சடலத்தை தேடி வந்தனர். இந்த சடலமானது இன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Hyderabad Hussain Sagar lake man commit suicide with covid 19 symptoms