தண்டனைக் கைதிகளுக்கு விடுப்பு வழங்க தடை இல்லையென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


​தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு மனுக்கள் நிலவையில் இருக்கும்போது விடுப்பு வழங்கக்கோரி தண்டனைக் கைதிகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர்.

இந்நிலையில், மேல்முறையீடு மனுக்கள் நிலுவையில் இருந்தாலும், தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்பு, அவசரகால விடுப்பு வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த மனுக்கள் மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மாறுபட்ட தீர்ப்புகளை நீதிபதிகள் வழங்கியதால், இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதன்போது மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும் போது, தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்போ அல்லது அவசர கால விடுப்போ வழங்க எந்தத் தடையும் இல்லை என்று உயர் நீதிமன்ற 03 நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Madras High Court has ordered that there is no bar on granting leave to convicts


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->