சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட நிலக்கரி சுரங்கம்: உடல் கருகி உயிரிழந்த தொழிலாளிகள்! - Seithipunal
Seithipunal


நாகலாந்து, ஓக்கா மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 

இந்த தீ விபத்தில் 4 தொழிலாளர்கள் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

விபத்து ஏற்பட்ட சுரங்கத்தில் அஸ்ஸாமை சேர்ந்தவர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாக அந்த பகுதி எம்எல்ஏ தெரிவித்துள்ளார். 

இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட சுரங்கத்திற்கு எதிராக மாநில அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Illegal Coal Mining Workers died


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->