திருமணத்திற்கு சென்று., குடும்பத்தினரை இழந்து கண்ணீரில் மிதந்த கணவன்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரம்பான் மாவட்டத்திற்கு உட்பட்ட டாங்கர் கிராமத்தை சார்ந்தவர் பிஷன் தாஸ். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக ராம்பன் நகரில் இருக்கும் தனியார் வீட்டிற்கு குடிவந்த நிலையில்., தனது மனைவி மற்றும் 5 பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். 

நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பிஷன் தாஸ் நண்பரின் திருமணத்திற்கு சென்ற நிலையில்., பிஷன் தாஸின் உறவினரான ப்ரீத்தம் சிங் என்பவர் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். உறவினருடன் பிஷன் தாஸ் மனைவியான தர்ஷனா தேவி (வயது 36) பேசிக்கொண்டு இருந்துள்ளார். 

இந்த சமயத்தில்., வீட்டின் கியாஸ் சிலிண்டரானது பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறிய நிலையில்., வீடு மொத்தமாக தீப்பற்றி எரிந்தது. இதனால் வீட்டில் இருந்த அனைவரும் தீயில் சிக்கி மரண ஓலமிட்டு இருந்த நிலையில்., இதனை அறிந்து பதறிப்போன அக்கம் பக்கத்தினர் விரைந்து தீயை அணைக்க முயற்சித்தனர்.

died, murder, killed, suicide attempt,

மேலும்., இது குறித்து தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். வீடு முழுவதுமாக எரிந்து சாம்பலான நிலையில்., வீட்டில் இருந்த பிசின் தாஸின் மனைவி தர்சனா தேவி மற்றும் இவர்களின் மகள்கள் அஷி தேவி (வயது 13)., சந்தோஷ் தேவி (வயது 7) மற்றும் பிரியங்கா தேவி (வயது 3) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும்., இவர்களின் மற்றொரு மகளான அனிதா தேவி (வயது 5) மற்றும் மகன் ஜாகிர் சந்த் (வயது 1) மற்றும் உறவினரான ப்ரீத்தம் சிங் படுகாயத்துடன் அங்குள்ள இராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்., இன்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தைகள் இருவரும் பலியாகினர். ப்ரீத்தம் சிங் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டில் இருந்த பசுவும் கன்றுக்குட்டியும் உயிரிழந்த நிலையில்., பிஷன் தாஸ் குடும்பத்தை இழந்து தவித்து வருகிறார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in jammu kashmir cylinder exploded family members died


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->