தேவரா படத்தின் புதிய அப்டேட்! - Seithipunal
Seithipunal


நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தேவரா திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவித்த படக்குழு.

இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள திரைப்படம் 'தேவரா பாகம் 1. இந்த படத்தில் ஹீரோவுக்கு நடிகையாக ஜான்வி கபூர் நடித்துள்ளார்.இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சயிஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். இந்த படம் பேன் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் நடிகர்  ஜூனியர் என்.டி.ஆர் இரட்டை  வேடங்களில் நடித்து உள்ளார்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் மற்றும் சுத்தமல்லி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வருகிற செப்டம்பர் 27 -ம் நாளன்று இப்படம் உலகமெங்கும் பிரம்மாண்டமாக  திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் 3 - வது பாடலான தாவூதி பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பின்னர், இந்த படத்தின் டிரைலர் குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்மூலம், இந்த தேவரா திரைப்படத்தின் டிரைலர் வரும் செப்டம்பர் 10 ஆம் நாளன்று வெளியாகவுள்ளது என புது போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devara Movie New Update


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->