வெளியானது மிஸ்டர் பச்சன் திரைப்படத்தின் ஓ.டி.டி தேதி.! - Seithipunal
Seithipunal


தெலுங்கு சினிமாவில் 'கர்தவ்யம்' படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கியவர் ரவி தேஜா. முன்னணி நடிகராக இருக்கும் இவர் ரசிகர்களால் 'மாஸ் மகாராஜா' என்று அழைக்கப்படுகிறார்.

இதுமட்டுமல்லாமல், 'பெங்கால் டைகர், ராஜா தி கிரேட், வால்டேர் வீரய்யா' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிலையில், ரவி தேஜா ஹரிஸ் ஷங்கர் இயக்கிய 'மிஸ்டர் பச்சன்' படத்தில் நடித்துள்ளார். 

பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சுபலேகா சுதாகர் மற்றும் ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த மாதம் 15-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனங்களையே இந்த படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வருகிற 12-ந் தேதி வெளியாகவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mister bachchan ott update


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->