முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்தநாள்.! காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மரியாதை.! - Seithipunal
Seithipunal


பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 1947 ஆண்டு இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்தது. அதன் பின்னர் நாட்டின் முதல் பிரதமராக  ஜவகர்லால் நேரு பதவி ஏற்றார்.  

ஜவகர்லால் நேரு நவம்பர் மாதம் 14, 1889 – ஆண்டு பிறந்தார். இவர் பண்டிட் நேரு மற்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்படுகிறார். இவருக்கு குழந்தைகள் என்றால் மிகவு பிடிக்கும் என்பதால், இவர் குழந்தைகள் மாமா நேரு என்றும் அழைக்கப்பட்டார். இதன் காரணமாக இவரது பிறந்தநாளன்று தேசிய குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

அதன் படி, இன்று நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள சாந்தி வனம் என்ற அவரது நினைவிடத்திற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் சென்று, அவரின் நினைவிடத்தில் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர். 

இதுகுறித்து, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, "நவீன இந்தியாவை உருவாக்கியவர் பண்டிட் நேரு. அவரது வளர்ச்சிகர எண்ணங்கள், சவாலான சூழலிலும் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் இந்தியா முன்னேற்றம் அடைய வழிவகுத்தது. இவர் ஜனநாயகத்தின் சாம்பியன். உண்மையான தேசப்பற்றாளருக்கு எனது பணிவான அஞ்சலி" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india first president jawaharlal nehru birthday congrass parties leader respect statue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->