6 நாள் பயணமாக உகாண்டா, மொசாம்பிக் விரையும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்..! காரணம் என்ன.? - Seithipunal
Seithipunal


கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான உகாண்டா மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப்பயணமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சொல்கிறார்.

இதில் முதல் கட்டமாக உகாண்டாவுக்குச் செல்லும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உகாண்டாவின் வெளியுறவு மந்திரி ஜெனரல் ஜெஜெ ஒடோங்கோவுடன் பிரதிநிதிகள் குழு அளவிலான பேச்சு வார்த்தை நடத்துகிறார். இதைத்தொடர்ந்து, ஜிஞ்சாவில் உள்ள தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின்(NFSU) போக்குவரத்து வளாகத்தையும் அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைக்கிறார்.

மேலும் இந்தியாவிற்கு வெளியே NFSU-இன் முதல் வளாகத்தை அமைப்பது தொடர்பாக இந்தியா மற்றும் உகாண்டா இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது. இதையடுத்து உகாண்டாவில் சூரிய சக்தியில் இயங்கும் நீர் விநியோகத் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார். மேலும் உகாண்டாவின் வர்த்தக மற்றும் வணிக சமூகத்தினரிடமும், புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் உரையாற்றுகிறார்.

இதைத்தொடர்ந்து, ஏப்ரல் 13 முதல் 15 வரை மொசாம்பிக் செல்கிறார். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஒருவர் மொசாம்பிக் நாட்டிற்கு செல்வது இதுவே முதன்முறையாகும். இந்த பயணத்தின் போது மொசாம்பிக் வெளியுறவு அமைச்சர் வெரோனிகா மக்காமோவுடன் கூட்டு ஆணைக்குழு கூட்டத்தின் ஐந்தாவது அமர்வுக்கு இணைத் தலைவராக தலைமை தாங்குகிறார்.

இதையடுத்து மொசாம்பிக்கில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் உரையாடுகிறார். மேலும் வெளியுறவுத்துறை அமைச்சரின் உகாண்டா மற்றும் மொசாம்பிக் பயணம், இரு நாடுகளுடனான இந்தியாவின் வலுவான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India Foreign Minister S Jaishankar to embark on 6 day visit to Uganda Mozambique


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->