லண்டனில் 'உலகப் பயணச் சந்தை'யில் இந்தியா பங்கேற்பு.! - Seithipunal
Seithipunal


லண்டனில் 'உலக பயணச் சந்தை' வருகின்ற 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் பல்வேறு நாடுகளில் இருந்து அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகமும் பங்கேற்று உள்ளது.

இது மிகப்பெரிய சர்வதேச பயணக் கண்காட்சிகளில் ஒன்றாகும். இந்த ஆண்டு கண்காட்சியின் கருப்பொருள் 'பயணத்தின் எதிர்காலம் இப்போது தொடங்குகிறது'.

உலக அளவில் சுற்றுலா மற்றும் தொழில் துறை சார்ந்த முன்னணி நிறுவனங்கள், பயண ஏற்பாட்டாளர்கள், முகவர்கள், நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்கள் என பல தரப்பினரும் கலந்துகொண்டு தங்களது சிறப்புகளை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், லண்டனில் நடைபெறும் 'உலக சுற்றுலா சந்தை' கண்காட்சியில் இந்திய அரங்கத்தை இந்திய உயர் ஆணையர் விக்ரம் துரைசாமி திறந்து வைத்தார். மேலும் பல்வேறு மாநிலங்களின் சார்பில் அமைக்கப்பட்ட அரங்கங்களையும் அவர் திறந்து வைத்தார். 

இந்த கண்காட்சியில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சக செயலாளர் அர்விந்த், ஒடிசா, மத்திய பிரதேசம், கர்நாடகா, மராட்டியம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சுற்றுலா அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India participates the World Travel Market in London


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->