இந்தியாவின் குடியரசு தின வரலாறு.. பார்க்கலாம் வாங்க.!! - Seithipunal
Seithipunal


நமது இந்திய நாடானது, விடுதலை பெற்ற பிறகு 1950ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் நாளை, இந்திய குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.

ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்கு பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசு தினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

நம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரை நீத்த தியாகிகளை நினைவுக்கூறும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, தேசிய கீதம் பாடி, கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீர தீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி இந்தியா விழாக்கோலம் காணும் நாள் இது.

நமது, இந்திய நாடானது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் பெருமைக் கொள்கிறோம். இதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது.

சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட இந்திய நாட்டில் பல வேறுபாடுகள் புதைக்கப்பட்டிருந்தாலும், நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றை வார்த்தையில் பெருமையடைகிறோம்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India Republic day history


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->