போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனம்! உடனே 30 டன் நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா!
India sent 30 tonnes of relief goods to war affected Palestine
பாலஸ்தீன மக்களுக்கு 30 டன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் மோதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா மனிதாபிமான உதவியாக இந்த பொருட்களை வழங்கியுள்ளது.
கடந்த அக்டோபர் 7-ம் தேதி, ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதற்குப் பதிலாக, இஸ்ரேல் காசா பகுதியில் தொடர் தாக்குதல்கள் நடத்தியதில், 40,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இந்த மோதல்களால் லட்சக்கணக்கானோர் அகதிகளாக மாறி பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், இந்தியா மனிதாபிமான அடிப்படையில் பாலஸ்தீன மக்களுக்கு உதவியாக 30 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது. இதில் மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், பல் மருத்துவ சாதனங்கள் மற்றும் அதிக சக்தி கொண்ட பிஸ்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கும்.
இந்த நிவாரண பொருட்கள் ஐ.நா.யின் யுஎன்ஆர்டபிள்யூஏ (UNRWA) மூலம் பாலஸ்தீன மக்களிடம் விநியோகிக்கப்படும். இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்த பகுதி மக்களுக்கு உணவுப்பற்றாக்குறையால் பெரும் அவல நிலை ஏற்பட்டு வருவதாக ஐ.நா. உலக உணவுத் திட்ட அமைப்பு (WFP) தெரிவித்துள்ளது.
English Summary
India sent 30 tonnes of relief goods to war affected Palestine