நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியன்மார்; 15 டன் நிவாரண பொருட்களை அனுப்பி உதவிய இந்தியா..!
India sent relief supplies to earthquake hit Myanmar
மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 என அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் மியான்மரில் 144 பேர், தாய்லாந்தில் 10 பேர் என மொத்தம் 154 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
மேலும் இடிந்து விழுந்துள்ள கட்டிட இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அங்கு மீட்புப்பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், குறித்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு உலக நாடுகள் நிவாரண உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவும் மியன்மாருக்கான 15 டன் நிவாரண பொருட்களை ராணுவ விமானம் மூலம் மியான்மருக்கு அனுப்பி வைத்துள்ளது.
அதில், தற்காலிக கூடாரம், போர்வை, உணவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சூரிய ஒளி மின் விளக்கு, ஜெனரேட்டர், அடிப்படை மருந்துகள் உள்பட பல்வேறு நிவாரண பொருட்கள் அடங்குகின்றன.
English Summary
India sent relief supplies to earthquake hit Myanmar