ஜனநாயகத்தின் மதிப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை -   துணை ஜனாதிபதி பேச்சு.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் பேசி வருகிறார். அதன் படி, அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேசும்போது "இந்திய ஜனநாயகம் மற்றும் நீதிமன்ற அமைப்பு தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றன" என்று குற்றம் சாட்டினார். 

அதன் பின்னர், அவர் லண்டனில் பேசும்போது, "இந்தியாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்படுவதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும். இந்தியாவில் பத்திரிகை துறை, நீதிமன்றம், பாராளுமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. 

நாட்டில் ஒவ்வொரு எதிர்க்கட்சி தலைவரிடமும் அரசு அமைப்புகள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்று கேட்டு பாருங்கள். என்னுடைய செல்போனில் பெகாசஸ் உள்ளது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, இது போன்று எல்லாம் நடக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், நேற்று ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார், சவுத்ரி சரண்சிங் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆயுர்வேத மஹாகும்பம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். 

அப்போது அவர் பேசியதாவது, "காங்கிரஸ் ஆட்சியில் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. சில மனிதர்கள் தங்களது குறுகிய பார்வையால் நாட்டின் சாதனைகளை குழிதோண்டி புதைக்க முயற்சிக்கின்றனர். 

நாட்டில் ஜனநாயக மதிப்புகள் மிக முக்கியம் வாய்ந்தது. ஜனநாயகத்தின் அன்னையாக நாம் இருக்கும்போது, கோவில்கள் சேதமடைய அனுமதிக்க முடியாது" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india vice president jegadeep dhankar says democrasy value important


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->