முதலிடத்தை பிடிப்பது யார்?இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்!
India vs New Zealand: Who will take the top spot?
12வதுமற்றும்கடைசிலீக்ஆட்டத்தில்இன்றுஇந்தியா,நியூசிலாந்துஅணியைஎதிர்கொள்கிறது.அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்ட இவ்விரு அணிகளும் தங்கள் பிரிவில் முதலிடத்தை பிடிக்க தீவிரம் காட்டுகின்றன.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த சில நாடுகளாக பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இந்திய அணிக்குரிய ஆட்டம் மட்டும் துபாயில் நடக்கிறது.பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் துபாயில் நடந்துவருகிறது.
இந்தநிலையில் 12-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து (ஏ பிரிவு) அணியை சந்திக்கிறது.இந்த போட்டி தொடரில் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.

முன்னதாக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் முறையே வங்காளதேசத்தையும், பாகிஸ்தானையும் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து அரையிறுதியை உறுதி செய்தது. இதேபோல் மிட்செல் சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி லீக் ஆட்டங்களில் 60 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும் துவம்சம் செய்து அரையிறுதியை எட்டியது. இதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்ட இவ்விரு அணிகளும் தங்கள் பிரிவில் முதலிடத்தை பிடிக்க தீவிரம் காட்டுகின்றன.
இன்றைய போட்டிபிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
English Summary
India vs New Zealand: Who will take the top spot?