விதிகளை மீறும் வாட்ஸ் ஆப் கணக்குகள்.! முடக்கிய இந்திய நிறுவனம்..!
india whatsapp company close in whatsap accounts
வாட்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் விதிமுறைகளை மீறி செயல்படும் கணக்குகளை மாதம் தோறும் முடக்கி வருகிறது. அதன்படி, இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 23 லட்சத்து 28 ஆயிரத்து வாட்ஸ் ஆப் கணக்குகளை அந்த நிறுவனம் முடக்கியுள்ளது.
இந்த கணக்குகள் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக முடக்கப்பட்டுள்ளன. இதே போன்று கடந்த ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சுமார் 23.87 லட்சம் கணக்குகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் முடக்கியுள்ளது.
அதேபோல் கடந்த ஜூன் மாதத்தில் 22 லட்சம் கணக்குகளும், மே மாதம் 19 லட்சம் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் பயனர்-பாதுகாப்பு அறிக்கையில் பெறப்பட்ட பயனர் புகார்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட 13 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அதில், 10 லட்சம் கணக்குகள் பிறரின் எந்த வித புகாரும் இன்றி நிறுவனமே கண்காணித்து தாமாக முடக்கியுள்ளது.
English Summary
india whatsapp company close in whatsap accounts