127 மணி நேரம் நடனமாடி கின்னஸ் உலக சாதனை படைத்த 16 வயது இந்திய சிறுமி.!
Indian girl 127 hours dance Guinness World record
உலகத்தில் உள்ள சிலர் வழக்கத்திற்கு மாறான சில செயல்களை செய்து தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். அந்த வகையில் சிலர் உலக சாதனைகளை படைக்கின்றனர்.
அந்த வகையில் இடைவிடாத சாகசம், சமையல் நடனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ந்து பலமணி நேரங்கள் செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் 5 நாட்கள் தொடர்ந்து நடனமாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரை சேர்ந்த சிருஷ்டி சுதிர் ஜக்தாப் என்ற 16 வயது சிறுமி கடந்த மே 29ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரை 5 நாட்கள் (127 மணி நேரம்) இந்தியா பாரம்பரிய நடனங்களில் ஒன்றான கட்ட நடனமாகியுள்ளார்.
இதற்கு முன் கடந்த 2018ம் ஆண்டு நேபாள நடன கலைஞரான பந்தனா 126 மணிநேரம் நடனமாடிய சாதனையை இந்திய சிறுமி முறியடித்துள்ளார். மேலும் 127 மணி நேர நடனத்தில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 நிமிட இடைவெளி மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளார்.
English Summary
Indian girl 127 hours dance Guinness World record