யு.டி.எஸ் செயலி மூலம் பயணசீட்டு வாங்குவதற்கான கட்டுப்பாடு தளர்வு - ரெயில்வே துறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ரயிலில் செல்வதற்கு ரெயில்வே பயணிகள் யு.டி.எஸ் செல்லிடப்பேசி செயலியின் மூலமாக முன்பதிவில்லா பயணசீட்டுகளை வாங்கிக் கொள்ளுவதில் இதுவரை இருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு அளித்து ரெயில்வே துறை அறிவித்துள்ளது. 

அந்த அறிவிப்பின் படி, ரெயில் பயணசீட்டு எடுக்கும் புறநகர்ப் பயணிகள், ரெயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிற்குள் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, தற்போது அவர்கள் 20 கிலோ மீட்டருக்குள் இருக்கலாம் என்றும், 

புறநகர்ப் பகுதி அல்லாத ரெயில் நிலையங்களில், இதுவரை இரண்டு கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, 5 கிலோ மீட்டர் தொலைவு இருக்கலாம் என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்த வசதி நவம்பர் 7ஆம் தேதி முதல் அனைத்து மண்டலங்களுக்கும் நடைமுறைக்கு வந்திருப்பதாகவும், தொடர்ந்து பயணிகள் வைத்த கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் இந்திய ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. 

நாட்டில், காகிதப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், ரெயில்வே நிலையங்களில் பயணிகள் பயணசீட்டு வாங்குமிடத்தில் வரிசையில் நிற்பதை தவிர்க்கும் நோக்கத்திலும் இந்தச் செயலி உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian railway allounce passangers ticket relaxation in U.T.S app


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->