அரையாண்டு தேர்வில் இரண்டாவது மதிப்பெண் - மன அழுத்தத்தில் மாணவன் எடுத்த விபரீத முடிவு.!
nineth class student sucide in coimbatore
கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி மகாராணி அவென்யூ நகரை சேர்ந்தவர் பியூலா மகன் சசீந்திரா. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். வகுப்பில் எப்போதுமே முதல் மதிப்பெண் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ள இவர், கடந்த மாதம் நடந்த அரையாண்டு தேர்வில் 2-ம் இடம் பிடித்துள்ளார்.
இதனால் மனவேதனையில் இருந்து வந்த மாணவன் சசீந்திரா கடந்த சில நாட்களாக தனது நண்பர்கள், உடன் படித்தவர்கள் மற்றும் தாயாருடனும் சரியாக பேசாமல் தனியாகவே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சசீந்திரா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சசீந்திராவை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே சசீந்திரா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சசீந்திராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில், வகுப்பில் எப்போதுமே முதல் மதிப்பெண் எடுக்கும் சசீந்திரா அரையாண்டு தேர்வில் 2-வது இடம் வந்ததால் மன அழுத்தத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
nineth class student sucide in coimbatore