பவுர்ணமி கிரிவலம் - திருவண்ணாமலையில் சிறப்பு ரெயில் இயக்கம்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு செல்வது வழக்கம். 

இந்த நிலையில், வருகிற 13ம் தேதி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரத்திற்கும் முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவுள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருகிற 13ம் தேதி காலை 9.25 மணிக்கு விழுப்புரத்திலிருந்து ரெயில் புறப்படும் என்றும், மறுமார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து அதே நாள் மதியம் 12.40 மணிக்கு விழுப்புரம் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

special train run in thiruvannamalai for povurnami girivalam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->