பொங்கல் பண்டிகை - தமிழகம் முழுவதும் 320 சிறப்பு இணை பேருந்துகள் இயக்கம்.!
special bus run in tamilnadu for pongal festival
இந்த வருடம் தைப்பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், அனைவரும் புத்தாடைகள் மற்றும் பொங்கலிட தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இதேபோன்று வெளியூர்களில் வேலை செய்பவர்கள் சொந்த ஊருக்கு செல்லவும் தயாராகி வருகின்றனர். இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 25 ஆயிரத்து 752 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல், சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தொடர்ந்து ஆறு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் பேருந்து, ரெயில் முனையங்களுக்கு வசதியாக செல்லவும் நாளை முதல் 13-ம் தேதி வரை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 320 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட மூன்று இடங்களில் இருந்து சிறப்பு இணைப்பு பேருந்துகள் புறப்படுகின்றனர்.
English Summary
special bus run in tamilnadu for pongal festival