20 ஆயிரம்.. 10 நாள்... ஆன்மிக சுற்றுலா அறிவித்த இந்திய ரெயில்வே.!
indian railway announce Spiritual tourism
20 ஆயிரம்.. 10 நாள்... ஆன்மிக சுற்றுலா அறிவித்த இந்திய ரெயில்வே.!
விருதுநகர் மாவட்டத்தில் இன்று இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி தென் மண்டலப் பொதுமேலாளர் ரவிக்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, "கோடை விடுமுறையையொட்டி இந்திய ரயில்வே, ஐ.ஆர்.சி.டி.சியுடன் இணைந்து ஆன்மிக சுற்றுலா ரயிலை இயக்க உள்ளது.
இந்த ரெயிலில் நபர் ஒருவருக்கு ரயில் கட்டணம், தங்கும் இடம், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிக்கும் சேர்த்து 20 ஆயிரத்து 367 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படும். இதே போல், குளிர் சாதனப் பெட்டிக்கான கட்டணம் 35 ஆயிரத்து 651 ஆகும். இதில் பயணம் செய்யும் பயணிக்கு தங்கும் இடம், வாகனம் என்று அனைத்தும் குளிர்சாதன வசதியுடன் வழங்கப்படும்.
![](https://img.seithipunal.com/media/tRAINI A.jpg)
இந்த ரயில் மே மாதம் 4-ம் தேதி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்துள்ள கொச்சுவேலி பகுதியில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை, விருதுநகர், மதுரை வழியாக தஞ்சை, சென்னை மார்க்கத்தில் வட இந்தியா நோக்கி செல்லும்.
அங்கு பூரி, கோனார்க், கொல்கத்தா, கயா, திரிவேணி சங்கமம், வரணாசி உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று திரும்பும். மொத்தம் 10 நாள் சுற்றுலா மேற்கொள்ளப்படும். இந்த ரெயிலில் நான்கு குளிர்சாதனப் பெட்டிகள் இருக்கும். இந்த ரெயில் சுற்றுலா செல்ல விரும்பும் பயணிகள் இணைய வழியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்” என்றுத் தெரிவித்தார்.
English Summary
indian railway announce Spiritual tourism