அதிமுக ஓட்டும் எங்களுக்குத்தான்... சீமானுக்கு ஆப்பு இருக்கு... திமுக அமைச்சர் பரபரப்பு பேட்டி!
DMK Minister Ragupathy ADMK NTK Seeman
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவினர் திமுகவிற்கே ஆதரவு தெரிவித்தனர்.
அதிமுகவினர் தங்களே மனமுவந்து திமுகவுக்கு வாக்களித்ததால்தான் வெற்றி எங்களுக்கு கிடைத்தது. இது, அதிமுகவின் கணிசமான பகுதியினரே எங்களது அரசின் செயல்பாடுகளை ஆதரிப்பதை நிரூபிக்கிறது.
திமுக அரசு தொடர்ந்து பல்வேறு மகளிர் நலத்திட்டங்கள் மற்றும் சமூகநீதி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால், மக்கள் நம்பிக்கையுடன் திமுகவை தேர்வு செய்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வந்தபிறகு, அதிமுக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இது அவரின் தலைமைத்துவ திறன் கேள்விக்குறியாக இருப்பதை உணர்த்துகிறது. தற்போதைய நிலைமை பார்க்கும்போது, அதிமுக உண்மையில் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் உள்ளதா என்பது கூட சந்தேகமாக இருக்கிறது.
பாஜக கொண்டு வரும் திட்டங்களை வெளிப்படையாக எதிர்க்கும் துணிவு எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. அவர் மறைமுகமாக அவர்களை ஆதரிக்கிறார்.
நாம்தமிழர் கட்சி தலைவர் சீமான் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்படாவிட்டாலும், நீதிமன்றத்தில் தனது வழக்கை எதிர்கொள்வதே சரியான நடைமுறையாகும் என்றார்.
English Summary
DMK Minister Ragupathy ADMK NTK Seeman