மீண்டும் படிப்பைத் தொடர செல்லும் இந்திய மாணவர்கள்..! - Seithipunal
Seithipunal


மருத்துவ படிப்பை முடிப்பதற்காக, இந்திய மாணவர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து உக்ரைன் செல்கின்றனர். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில், அங்கு பல்வேறு இடங்களில் மருத்துவம் பயின்று வந்த இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்.

ரஷ்யா - உக்ரைனுக்கு இடையே போர் துவங்கி ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிய நிலையிலும், உக்ரைன் நாட்டில் பல பகுதிகளில் தொடர்ந்து ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் ஆன்லைன் மூலமாக மருத்துவம் படிப்பது செல்லாது என தெரிவித்துள்ளது. இதையடுத்து கடுமையான போர்ச் சூழலுக்கு மத்தியிலும், தற்போது மீண்டும் மருத்துவ படிப்பை தொடர, மாணவர்கள் உயிரை பணயம் வைத்து உக்ரைன் செல்கின்றனர்.

இதுகுறித்து கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் கூறியதாவது: 

உக்ரைனில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் 5-ம் ஆண்டு படித்து வருகிறேன். எனக்கு இன்னும் ஆறு மாத காலம்தான் வகுப்புகள் உள்ளது. போர் காரணமாக இந்தியா திரும்பினேன்.

தற்போது, மீண்டும் அழைப்பு வந்ததால், மூன்று வாரத்திற்கு முன் சுற்றுலா விசா மூலமாக திருவனந்தபுரத்தில் இருந்து விமானத்தின் மூலமாக துபாய் சென்று, அங்கிருந்து மால்டோவா சென்றேன். பின் அங்கிருந்து பஸ்சில் 300 கி.மீ., பயணித்து பல்கலைகழகத்துக்கு வந்தேன். இங்கு விடுதியில் தங்கியுள்ளேன் என்று  அந்த மாணவர் தெரிவித்தார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian students are going to continue their studies again


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->