வெடிகுண்டு மிரட்டல்; அவசரமாக மும்பையில் தரையிறங்கிய இண்டிகோ விமானம்..!
IndiGo flight makes emergency landing in Mumbai due to bomb threat
ஜெய்ப்பூரிலிருந்து வந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கட்டுள்ளது. இதனை தொடர்ந்து மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; "ஜெய்ப்பூரிலிருந்து மும்பை செல்லும் விமானத்தில் ஒரு வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக, 20.43 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த ''விமானம் 20.50 மணிக்கு பாதுகாப்பாக தரையிறங்கியது. தற்போது விமான நிலைய நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் உள்ளன. CSMIA விமான நிறுவனம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுடன் தீவிரமாக ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறது. பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு எங்கள் முன்னுரிமையாக உள்ளது'' என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
IndiGo flight makes emergency landing in Mumbai due to bomb threat