அல்லு அர்ஜூன் - அட்லீ கூட்டணியின் பட அறிவிப்பு நாளை வெளியாகும்..!
Allu Arjun and Atlee film announcement will be released tomorrow
அல்லு அர்ஜுன் மற்றும் தமிழ் இயக்குனர் அட்லீயுடன் இணைய இருக்கிறார். அட்லீ, ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இந்த படத்தை இயக்கவுள்ளார். இதனால் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ள நிலையில், சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குனர் அட்லீயை சந்தித்து இப்படம் குறித்து குறித்து பேச்சுவார்த்தை நடத்த அல்லு அர்ஜுன் சென்னை வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த படத்தின் அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று வீடியோ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், அட்லி அல்லது அல்லு அர்ஜுனின் பெயர் நேரடியாக இல்லாமல் இருந்தாலும், இது அவர்களது கூட்டணியில் உருவாகும் புது திரைப்பட அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது. அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Allu Arjun and Atlee film announcement will be released tomorrow