ஷாருக்கானின் 'கிங்'... தீபிகா படுகோன் சுகானாவுக்கு அம்மாவாக நடிக்கப் போகிறாரா?
Shah Rukh Khans King Deepika Padukone going play Suhana mother
நடிகர் 'ஷாருக்கான்' பாலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இவருக்கு கடந்த 2002-ல் வெளியான 'தேவதாஸ்' மிகப்பெரிய பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இதில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான 'பதான்', 'ஜவான்', 'டங்கி' படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.இவர் தற்போது 'கிங்' படத்தில் நடித்து வருவதில் அவரது மகள் 'சுஹானா கான்'அவர்களும் நடிக்கிறார்.
இப்படத்தை வார் மற்றும் பதான் பட புகழ், சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். இந்நிலையில் , இப்படத்தில் சுஹானா கானின் அம்மாவாக நடிகை தீபிகா படுகோனுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரியவந்துள்ளது.
இவர் ஷாருக்கானுடன், 'ஓம் சாந்தி ஓம்', சென்னை எக்ஸ்பிரஸ்', 'ஹேப்பி நியூ இயர்', 'பதான்' மற்றும் 'ஜவான்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் காம்போவைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருப்பதாகத் தெரிகிறது.
English Summary
Shah Rukh Khans King Deepika Padukone going play Suhana mother