போலி ஆவணங்கள் மூலம் பிறப்புச் சான்றிதழ் - 43 பேர் மீது வழக்கு பதிவு...!
case file against 43 peoples for birth certificate buy fake documents
வங்கதேசம் நாட்டில் இருந்து ஏராளமானோர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவி வருவது தொடர் கதையாகி வருகிறது. அப்படி வந்தவர்கள் மும்பை உள்பட பல பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் முறைகேடாக பிறப்பு சான்றிதழ் பெறுவதாக பாஜக முன்னாள் எம்.பி. கிரித் சோமையா குற்றம்சாட்டி இருந்தார்.
இப்படி முறைகேடாக பெற்ற பிறப்பு சான்றிதழ்கள் மூலம் வங்கதேசத்தினர் இந்தியர்கள் என்று கூறி ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், ஜல்காவில் முறைகேடாக பிறப்பு சான்றிதழ் பெற்ற 43 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 43 பிறப்பு சான்றிதழ்களும் ஜல்காவ் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டவை ஆகும்.
அந்த சான்றிதழ்கள் அனைத்தும் போலி ஆவணங்களை பயன்படுத்தி முறைகேடாக பெறப்பட்டதாக காவல் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்களா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
case file against 43 peoples for birth certificate buy fake documents