பெண் அமைச்சரை இழிவாக பேசிய வழக்கு - முன்னாள் பாஜக தலைவர் சிடி ரவிக்கு இடைக்கால ஜாமீன்.! - Seithipunal
Seithipunal


மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேசியது தொடர்பாக கர்நாடக சட்டசபையில் வாதங்கள் நடைபெற்றது.

அப்போது, அமைச்சர் ஹெப்பல்கருக்கு எதிராக முன்னாள் பாஜக பொதுச் செயலாளர் சி.டி.ரவி பலமுறை இழிவான வார்த்தையை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதாவது, லட்சுமி ஹெப்பால்கரின் நடத்தை மற்றும் கற்பை குறை கூறும் கடுஞ்சொல்லை சிடி ரவி பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அமைச்சர் அளித்த புகாரின் பேரில் சி.டி.ரவி மீது பல்வேறு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், கைதுக்கு ஒத்துழைக்காத சி.டி.ரவியை சட்டசபை வளாகத்தில் வைத்து போலீசார் கைது செய்து குண்டுகட்டாக தூக்கிச்சென்றது. 

சி.டி.ரவி கைது செய்யப்பட்டதற்கு எதிராக பெங்களூரு, சிக்மகளூர், பெலகாவி உள்ளிட்ட இடங்களில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் அவருக்கு நேற்று இடைக்கால ஜாமீன் வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வெளியே வந்த அவர், சிறையில் தன்னை பயங்கரவாதி போல் நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

interim bail to bjp leader cd ravi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->