'பாகிஸ்தானி' என்று கூறுவது மத உணர்வுகளை புண்படுத்தும் குற்றமா? உச்ச நீதிமன்றம் தீர்ப்பு என்ன? - Seithipunal
Seithipunal


'பாகிஸ்தானி' என கூறி மத உணர்வுகளை புண்படுத்தியதாக உருது மொழிபெயர்ப்பாளர் ஒருவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஹரினந்தன் சிங் என்பவர் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். 

ஹரிநந்தன் சிங் என்பவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், சில தகவல்களை கேட்டிருந்தார். அந்த தகவல்களை நேரடியாக அவரிடம் வழங்க மாவட்ட ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, அந்த தகவல்களுடன் அரசு ஊழியரான உருது மொழி பெயர்ப்பாளர் சென்றுள்ளார். ஆனால், அவரை ஹரிநந்தன் சிங், 'பாகிஸ்தானி' என திட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ஹரிநந்தன் சிங் மீது உள்ளூர் நீதிமன்றத்தில், அந்த உருது மொழிபெயர்ப்பாளர் வழக்கு தொடர்ந்த அவர், 'பாகிஸ்தானி என என்னை கூறியதன் வாயிலாக, மத உணர்வுகளை ஹரிநந்தன் சிங் புண்படுத்தி விட்டார்' என கூறியிருந்தார்.

இதையடுத்து, ஹரிநந்தன் சிங் மீது ஐந்து பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து, ஹரிநந்தன் சிங், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். ஆனால், அங்கும் அவரின் முறையீடு ரத்து செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் ஹரிநந்தன் சிங் மனு தாக்கல் செய்தார்.  குறித்த மனு, நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் சதிஷ்சந்திர சர்மா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்  பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

'பாகிஸ்தானி என திட்டுவது, மத உணர்வை புண்படுத்தும் குற்றமல்ல' என தெரிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நபரை, வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது.

அத்துடன், ஒருவரை பாகிஸ்தானி என கூறியதன் வாயிலாக, அந்த நபரின் மத உணர்வு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. எனவே, குற்றம் சாட்டப்பட்ட ஹரிநந்தன் சிங் மீது, இந்திய தண்டனை சட்டம் 298ன் கீழ் தொடரப்பட்ட குற்ற வழக்கை இந்த அமர்வு தள்ளுபடி செய்கிறது.' எனவும் கூறப்பட்டது. 

மேலும் 'உருது மொழிபெயர்ப்பாளரை தவறான நோக்கத்தில் தான் ஹரிநந்தன் சிங் கூறியுள்ளார் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெரிகிறது. எனினும், அதற்காக அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின், 298-வது வழக்கு பதிவு செய்ததை இந்த நீதிமன்றம் ரத்து செய்கிறது' என்று உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Isnt saying Pakistani a crime of hurting religious sentiments Supreme Court


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->