சென்னை மக்களே அறிய வாய்ப்பு! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Ration Card thirutham Camp Chennai
குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோருக்கு அரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் மார்ச் 8ஆம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
பொது விநியோகத் திட்டத்தின் பலன்களை மக்கள் எளிதில் பெறும் வகையில், ஒவ்வொரு மாதமும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 2025 மாதத்திற்கான முகாம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் மார்ச் 8ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு/மாற்றம் உள்ளிட்ட சேவைகளை இந்த முகாமில் மேற்கொள்ளலாம். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற முடியாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்களை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவிக்கலாம்.
சென்னையில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
English Summary
Ration Card thirutham Camp Chennai