கிளம்பாக்கம் நடை மேம்பாலம்: மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு தடை - உயர்நீதிமன்றம் அதிரடி!
Kilampakkam Over Walk Bridge issue HC Order
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை எளிதாக சென்றடைய வண்டலூர்-ஊரப்பாக்கம் ரயில் நிலையம் இடையே புறநகர் ரயில் நிலையம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து முனையத்திற்கு செல்ல மேம்பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலத்திற்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக சட்டப்படி முதல் அறிவிப்பை தமிழக அரசு அரசிதழில்தான் வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், மக்களின் ஆட்சேபனையை கேட்காமல் மாவட்ட ஆட்சியர், நிலம் பொது பயன்பாட்டிற்கு தேவைப்படுகிறது என அறிவிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிமன்றம் ஆட்சியர் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
English Summary
Kilampakkam Over Walk Bridge issue HC Order