இஸ்ரேல் போர்: படுகாயம் அடைந்த கேரள செவிலியர்! கதறிய குடும்பத்தினர்! - Seithipunal
Seithipunal


இஸ்ரேலில் நடந்து வரும் போர் அனைத்து நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் ராணுவத்தினர் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இந்த தாக்குதல் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். 

இந்த தாக்குதல் காரணமாக இஸ்ரேலில் தங்கி இருக்கும் இந்தியர்கள் யாரும் உயிரிழந்ததாக உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் ராக்கெட் தாக்குதலின் போது படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

கேரளா, கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி ஷீஜா. இவர் இஸ்ரேலில் உள்ள அஷ்கெலோன் என்ற பகுதியில் செவிலியராக பணியாற்றி வருகிறார். 

இந்த பகுதி காசா எல்லையில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்ற நிலையில் ஷீஜா இருந்த பகுதியில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின் போது இவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இஸ்ரேலில் போர் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிந்த ஆனந்த் ஷீஜாவிடம் செல்போன் மூலம் வீடியோ காலில் பேசி பத்திரமாக இருக்குமாறு தெரிவித்துள்ளார். 

இருவரும் பேசிக் கொண்டிருந்த போதுதான் ஷீஜா இருந்த பகுதியில் ராக்கெட் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் ஷீஜா சிக்கிக்கொண்டதால் அவரது செல்போன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

ஆனந்த் மீண்டும் ஷீஜாவின் செல்போனிற்கு தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால் செல்போன் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில் மனைவிக்கு என்ன ஆனது என தெரியாமல் ஆனந்த் மற்றும் ஷீஜாவின் குடும்பத்தினர் கவலையாக இருக்கும்போது ராக்கெட் தாக்குதல் காரணமாக ஷீஜா காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது குடும்பத்தினருக்கு இஸ்ரேலில் இருக்கும் அவரது நண்பர்கள் தகவல் தெரிவித்தனர். 

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷீஜாவின் குடும்பத்தினர் கதறி துடித்தனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷீஜா உடன் அவரது குடும்பத்தினரை வீடியோ காலில் நண்பர்கள் பேச வைத்தனர். 

அப்போது ஷீஜாவின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் கண்ணீர் மல்க மகளின் நிலையைக் கண்டு வேதனை அடைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Israel attack Kerala nurse injured


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->