சந்திரபாபு நாயுடு வெறும் '0' மட்டுமே - ஜெகன் மோகன் ரெட்டி கடும் விமர்சனம்!  - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேசத்தில் மக்களவை தேர்தல் உடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

இந்த முறை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி, பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளது. 

இதற்கிடையே ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி 'சித்தம்' என்ற பெயரில் பிரசாதத்தை தொடங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக ஆந்திரா பாபட்லா பகுதியில் ஓய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி சந்திரபாபு நாயுடு வெறும் '0' மட்டுமே. பிற கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தால் அதன் முடிவு மிகப்பெரிய பூஜ்ஜியமாக தான் இருக்கும். 

கடந்த 2017-ல் அளித்த வாக்குறுதிகளை அவர் இன்னும் நிறைவேற்றவில்லை என கடுமையாக விமர்சித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jagan Mohan Reddy criticizes Chandrababu Naidu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->