முதல் மந்திரி மீது கல்வீசி தாக்குதல்... மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


ஆந்திரா, விஜயவாடாவில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தேர்தல் பிரசாரத்திற்காக ரோட் ஷோ நடத்தினார். இந்த ரோட் ஷோவில் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளார். 

இதில் காயமடைந்த ஜெகன்மோகன் ரெட்டி அருகில் இருந்த மருத்துவர்களிடம் முதலுதவி பெற்று மீண்டும் தனது யாத்திரையை தொடர்ந்தார். 

இந்த தாக்குதலின் பின்னணியில் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் இருப்பதாக விஜயவாடா ஓய்.எஸ்.ஆர் சி பி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

மேலும் கல்வீச்சு தாக்குதல் நடத்திய மர்ம நபர் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jagan Mohan reddy injured stone pelting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->