தொடர் ராஜினாமா கடிதம்: தலையில் துண்டைப்போட்ட ஜெகன் மோகன்! ஆந்திர அரசியலில் பரபரப்பு!
Jagan Mohan reddy party MP resignation
ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நர்சாபுரம் எம்.பி யாக இருக்கும் ரகு ராமகிருஷ்ணன் ராஜி தனது ராஜினாமா கடிதத்தை முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டிக்கு அனுப்பினார்.
அதில், என்னை நீங்கள் பதவி நீக்கம் செய்வதற்காக கஜினி முகமது போல பலமுறை முயற்சி செய்தீர்கள். அந்த முயற்சியில் உங்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை.
என்னை எம்.பியாக தேர்ந்தெடுத்த நரசாபுரம் தொகுதிக்காகவும் தொகுதி மக்களின் வளர்ச்சிக்காகவும் நேர்மையான செயல்களை செய்துள்ளேன்.
கடந்த மூன்று ஆண்டுகளாக நீங்கள் கொடுத்த இடையூறுகள் இடையே சிறப்பாக செயல்பட்டேன் என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.பிகள், எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்த பதவி விலகி வருவது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Jagan Mohan reddy party MP resignation