ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்..உலக நாடுகள் கண்டனம்!
Jammu and Kashmir terror attack The world condemns
ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷியா, ஈரான், சவுதி அரேபியா, இத்தாலி, உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில்40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
மேலும் மீட்பு பணிக்காக ஹெலிகாப்டரும் அனுப்பிவைக்கப்பட்டது. 20-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு பஹல்காம் ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 28 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் காயம் அடைந்த 13 பேரில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்தநிலையில், ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷியா, ஈரான், சவுதி அரேபியா, இத்தாலி, உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப எக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், காஷ்மீரில் இருந்து வெளியாகும் செய்தி மிகவும் கவலையளிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது. பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எங்கள் முழு ஆதரவும், ஆழ்ந்த அனுதாபங்களும் உண்டு. எங்கள் இதயங்கள் உங்கள் அனைவருடனும் உள்ளன என பதிவிட்டுள்ளார்.
இதேபோல ரஷிய அதிபர் புதின் வெளியிட்டுள்ள கண்டன் அறிக்கையில்,கூறியிருப்பதாவது:இது 'எந்த நியாயமும் இல்லாத ஒரு கொடூரமான குற்றம்.'இந்த மிருகத்தனமான குற்றத்திற்கு எந்த நியாயமும் இல்லை.'பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ரஷியா தொடர்ந்து வழங்கும் ,குற்றவாளிகள் தகுந்த தண்டனையை எதிர்கொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என புதின் கூறியுள்ளார்.
English Summary
Jammu and Kashmir terror attack The world condemns