அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகள் தீவிரம்... ஜம்மு - காஷ்மீர் ஏடிஜிபி நேரில் ஆய்வு..!
Jammu Kashmir ADGP Examined Amarnath Pilgrimage Arrangements
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத், இந்தியாவில் உள்ள புனித யாத்திரைத் தலங்களில் முதன்மையானது ஆகும். உலக பிரசித்தி பெற்ற அமர்நாத் குகைக் கோயில் சுமார் 3900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள இந்த அமர்நாத் குகைக் கோயிலுக்கு ஒவ்வொரு வருடமும் லட்சக் கணக்கான யாத்திரீகர்கள் புனித யாத்திரை சென்று வருவார்கள். இந்த புனித யாத்திரையானது மொத்தம் 52 நாட்கள் நடைபெறும்.
இந்நிலையில், இந்த வருடத்திற்கான அமர்நாத் புனித யாத்திரை வரும் ஜூன் 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் சமீப காலமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தி வருவது அதிகரித்துள்ளது.
இதையடுத்து ஜம்மு காஷ்மீர் ஏடிஜிபி ஆனந்த் ஜெயின் சந்தர்கோட் மற்றும் ரம்பன் ஆகிய இடங்களில் உள்ள லங்கார் தளங்களை நேரில் ஆய்வு செய்தார். மேலும் அமர்நாத் யாத்திரையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநிலத்தின் மூத்த காவல்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " அமர்நாத் யாத்திரையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். மேலும் இந்த யாத்திரை ஜம்மு காஷ்மீரில் இருந்து குறித்த நேரத்தில் தொடங்குவதற்கும், யாத்திரீகர்களின் பாதுகாப்பிற்காக யாத்திரை பாதை முழுவதும் போலீசார் நிறுத்தப் படுவது குறித்தும் பரிசீலித்து வருகிறோம்" என்று கூறினார்.
English Summary
Jammu Kashmir ADGP Examined Amarnath Pilgrimage Arrangements